Graphical Representations
மிக மகிழ்ச்சி...! உங்கள் கலாபாரதியின் வீடியோ பதிவுகள் 11௦௦ஐ கடந்து விட்டன...! உங்கள் அனைவரின் ஆதரவிற்கும் உதவிகளுக்கும் மிக நன்றி...! கலாபாரதியின் வரலாற்றில் இது ஒரு மைல் கல்...! எனினும் என் அன்பு நண்பர்களே...! நாம் பயணிக்க வேண்டிய தூரம், நம் முன் உள்ள கடமை மிகப் பெரியது...! 16 லட்சம் மாணவர்களை கலாபாரதி சென்றடைய வேண்டும். அவர்களில் பெரும்பாலோர் கடும் வறுமையிலும் கிராமங்களிலும் உள்ள மாணவச் செல்வங்கள்....! எண்ணற்ற கனவுகள் உடைய நம் அன்புக் குழந்தைகள்...! அவர்களே எதிர்காலத்தில் நம் தமிழகத்தையும் , ஏன் மொத்த பாரதத்தையும் காக்கப் போகின்றவர்கள்...! அவர்கள் அறியாமையில் இருந்தால் அத்தகைய மகத்தான கடமையை செய்ய இயலாது...! அவர்களின் அறிவுக் கண் திறக்கப் பட வேண்டும். அந்த 16 லட்சம் மாணவர்களை உங்கள்கலாபாரதி சென்றடைய வேண்டும். மீண்டும் மீண்டும் ரசித்துப் பயின்ற ராபர்ட் ப்ரோஸ்டின் வரிகள் நமக்கு வலிமை கொடுக்கின்றது...! காடுகள் ஆழமானவை...! மிக நீண்டவை...! கொடுத்த சத்தியங்கள் என் முன் உள்ளன...! என்னால் உறங்க முடியாது...! உறங்குவதற்கு முன் நீண்ட தூரம் சென்றாக வேண்டும்...! உறங்குவதற்கு முன் நீண்ட தூரம் சென்றாக வேண்டும்...! எத்தகைய மகத்தான கவிதை...! அடுத்த பதிவில் சந்திப்போம் அன்பு நண்பர்களே...! மக்களின் கலாபாரதியை மக்களிடம் கொண்டு செல்லுங்கள். வாழ்த்துகள் கோடி...! அன்புடன் யோகராஜன்... கலாபாரதி அகடமி. 03-February, 2018
Download
0 formatsNo download links available.